tamilnadu

img

பொன்விழா ஆண்டில் சிஐடியு மாநாடு - ஆர்.சிங்காரவேலு

இந்தியாவின் முதன் தொழிற்சங்கம் மெட்ராஸ் லேபர் யூனியன், 1918-ல் சென்னையில் துவங்கப் பட்டது. மே தினம் முதன் முதலாக 1923-ல் ம.சிங்காரவேலரால் சென்னை கடற்கரையில் செங் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. 2019 மே முதல் 2020 மே வரை சிஐடியு வின் பொன் விழா ஆண்டாகும். இந்தியாவின் முதல் மத்திய தொழிற் சங்கம் ஏஐடியுசி துவங்கி நூறு ஆண்டு ஆகிறது. தொழிலாளர் அனுபவத்தின் மூலமாக சங்கம் அமைத்த னர். ஒன்றுபட்டு போராடினர். பல உரிமைகள், பயன் களை பெற்றார்கள். 1970 மே 30-ல் சிஐடியு துவங்கப்பட்ட போது நிறை வேறிய அமைப்புச் சட்டத்தில் அனைத்து வகையிலான சுரண்டலுக்கும் முடிவு கட்டுவோம். இந்திய மண்ணில் சோசலிச சமுதாயம் உருவாக்குவோம் என சிஐடியு வின் லட்சியம் பிரகடனப்படுத்தப்பட்டது.

ஒன்றுபடு, போராடு என்பதே சிஐடியு -வின் முதன் முழக்கம் 1974 ரயில்வே தொழிலாளர்களின் ஒன்றுபட்ட வேலை நிறுத்தம், உட்பட பல மத்திய சங்கங்களின் ஆதர வுடன் நடைபெற்றது.  1982 ஜனவரி 19-ல் நம் நாட்டில் முதன் முதலாக, தொழிலாளர் கோரிக்கைகளுக்காக மட்டு மல்லாமல், விவசாயிகள், விவசாய தொழிலாளர் கோரிக் கைகளுக்காகவும் அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெற்றது. 1981-ல் பல்வேறு மத்திய சங்கங்கள் இணைந்து உருவாக்கிய தேசிய கிளர்ச்சி பிரச்சாரக்குழு வின் (என்சிசி) அறைகூவலுக்கிணங்க நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தின் போது, தமிழகத்தின் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் உட்பட 10 பேர் காவல்துறை துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானார்கள்.

1991-ல் மத்திய அரசு தாராளமயம், தனியார்  மயம் , உலக மயம் என்ற நவீன தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தத் துவங்கியதிலிருந்து, அதற்கு எதிராக 2020 ஜனவரி 8 உட்பட 19 அகில இந்திய பொது வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. அடுத்தடுத்த வேலை நிறுத்தங்களில் கூடுதல் பங்கேற்பைக் காண முடிந்தது. இதற்காக சிஐடியு எடுத்த சுயேட்சையான  நடவடிக்கைகள் ஏராளம், நாடாளுமன்றம் நோக்கி ஒன்றுபட்ட பேரணி களும் நடைபெற்றுள்ளன.

2017 நவம்பர் 9- 11 -ல் உழைப்பாளி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி (மகா பாதவ்) மாபெரும ஒன்றுபட்ட தர்ணா போராட்டம் நடந்தது.  பொதுவான கோரிக்கைகளுக்காக நடைபெற்ற வேலை நிறுத்தங்கள் மட்டுமல்லாமல் துறைவாரியான கோரிக்கைகளுக்காகவும் ஒன்றுபட்ட பல வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன.

ஒன்றுபட்ட போராட்டங்களின் உச்சகட்டமாக, 2019 மார்ச்சில் நாடாளுமன்றத் தேர்தல்களில் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேச விரோத, மதவாத, எதேச்சதி கார பாஜகவை முறியடிக்க வேண்டும் என்ற பி.எம்.எஸ்  நீங்கலாக, மற்ற 10 மத்திய  தொழிற்சங்கங்களும் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர் சம்மேளனங்களும் சேர்ந்து ஒன்றுபட்ட அறைகூவலை விடுத்தன.

மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின், சென்னை மாநகரில் ஜனவர் 23- 27-ல் சிஐடியு-வின் 16வது அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. காஷ்மீர் முதல் கன்னி யாகுமரி வரை 2000 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கி றார்கள். உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் டபிள்யு எப்டியு தலைவரும் பங்கேற்கிறார். நடைபெறுகின்ற போராட்டங்களில் கோடிக்கணக்கில் பங்கேற்கும் தொழிலாளர்கள், குறிப்பாக எந்த சங்கமும் சாராத தொழிலாளர்களின் பங்கேற்பு 30சதவீதமாக இருந்தும், அனைத்து சங்கங்களின் அரசியல் அறை கூவல் வெற்றிபெறவில்லை. இது ஏன் என மாநாடு பரி சீலிக்கும், சிஐடியு வின் அடிப்படை லட்சியங்களை நிறைவேற்றும் திசை வழியில் என்ன முன்னேற்றம் கண்டுள்ளோம்.  ஒட்டு மொத்த தொழிலாளி வர்க்கத்தை அரசியல் சித்தாந்த பிடிப்புள்ளவர்களாக மாற்றுவது குறித்தும் மாநாடு விவாதிக்கும்.

தொழிலாளி வர்க்கம் சந்திக்கும் சவால்களான நவீன தாராளமயம், மதவாதம், யதேச்சதிகாரம் போன்றவை களை எதிர்கொள்ள, சிஐடியு-வின் ஸ்தாபன பலம் தற்போ துள்ள 58.2 லட்சத்திலிருந்து 2020-ல் ஒரு கோடியாக உயர்த்துவது குறித்து மாநாடு விவாதிக்கிறது. தொழில் நடத்துவதை எளிமையாக்குவது என்ற  பெயரால் கடந்த 5 ஆண்டுகளாக கார்ப்பரேட் நிறுவனங்க ளின் வரி பாக்கி ரூ. 5.85 லட்சம் கோடி வசூலிக்க மோடி அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை. இந்த நிறுவனங்கள் வங்கக்கடனை திருப்பிச் செலுத்தாததால், வராக்கடன் ரூ.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரூ. 4.5 லட்சம் கோடி, கார்ப்பரேட், வருமான வரி, தள்ளுபடி செய்யப்படுகிறது. தொழிலாளர் ஊதியத்தில் 30 சதவீதம் வருமான வரி செலுத்துகின்றனர். சாமான்ய மக்கள் செலுத்தும் சராசரி ஜிஎஸ்டி வரி 18 சதவீதம் ஆனால் கார்ப்பரேட் வரி 15 சதவீதமாக மோடி அரசு குறைத்துள்ளது. நில வங்கிகள் உருவாக்கி, விவசாயிகளின் நிலம் கார்ப்ப ரேட்களால் அபகரிக்கப்படுகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபப்பசிக்கு தீனி போட, தொழிலாளி வர்க்கம் போராடிப்  பெற்ற 44 அடிப்படை  தொழிலாளர் சட்டங்களை, 4 சட்ட தொகுப்புகளாக சுருக்கும் முயற்சியில் பாஜக அரசு மிகுந்த முனைப்பு காட்டி வருகிறது. சம்பள பட்டுவாடா சட்டம், சமவேலைக்கு சமஊதியம், போனஸ் சட்டம் ஆகிய நான்கும் சம்பள சட்டத்தொகுப்பில் ஐக்கியமாகி விட்டன. 15-வது இந்திய தொழிலாளர் மாநாடு நிர்ணயித்த உணவு, உடை, இருப்பிடம், எரி பொருள் குறித்து நிர்ணயித்த அளவுகோல் படியும், 1992-ல் உச்சநீதிமன்றம் 25 சதவீதம் திருமணம், கல்வி, விழாக்கால செலவுக்களுக்காக சேர்க்கவேண்டும் என்று வழிகாட்டிய அடிப்படையிலும், தேவையின் அடிப்ப டையிலான குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 வருகிறது. அனைத்து சங்கங்களும் மாதம் ரூ. 21,000 என கோரிக்கை வைத்துள்ளன. தேசிய அடிமட்டக்கூலி தினசரி ரூ.178 என மத்திய தொழிலாளர் அமைச்சர் கூறுகிறார்.

தொழில் ரீதியிலான சுகாதாரம், பாதுகாப்பு சட்டத் தொகுப்பில், வேலை நேரம் மாநில அரசுகள் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று உள்ளது. டபிள்யுஎப்டியு -ன் அறை கூவல் வேலை நேரம், வாரம் 35 மணி நேரம் தினசரி 4 ஷிப்ட்கள் என்பதாகும். 8 மணிநேர வேலை என்ற சட்ட உரி மையும் பறிபோகும் நிலை உள்ளது.   முறைசாரா, தொழிலாளர், அங்கன்வாடி போன்ற திட்டத்தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க அரசு எவ்வித பங்களிப்பும் செலுத்தப்போவதில்லை என்பது சமூக பாதுகாப்பு சட்டத்தொகுப்பிலிருந்து தெரிகிறது. கட்டிடத் தொழிலாளர் நல வாரியங்கள் கலைக்கப்படும். பீடி, சினிமா, சுரங்கத் தொழிலாளர் சமூக பாதுகாப்பும் பறிபோகிறது. பிஎப், இஎஸ்ஐ திட்டங்கள் சீர்குலைக்கப்படுகிறது.

தொழில் உறவு சட்டத்தொகுப்பு சட்டமாக்கப்பட்டால், சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்த உரிமை போன்றவை பறிக்கப்படும். குறிப்பிட்ட கால வேலை, நீம் போன்றவை நாடு முழுவதும் ஏற்கனவே அமலாக்கப்படு கிறது. உற்பத்தியில் பயிற்சியாளர்கள் ஈடுபடுத்தப்படு கிறார்கள். “அமர்த்து துரத்து” கொள்கை அமலுக்கு வரு கிறது. காண்டிராக்ட் தொழிலாளர்களின் சட்டப்படியான உரி மைகளை காண்ட்ராக்டர் நிறைவேற்ற தவறினால் முதன்மை வேலை அளிப்பவர் நிறைவேற்ற வேண்டும் என்ற நிலையும் கைவிடப்படுகிறது. 16-வது சிஐடியு அகில இந்திய மாநாட்டில், குடியரசு தினத்தன்று, சட்டத்தொகுப்புகள், வேலையின்மை, மாற்றுக் கொள்கைகள், சமூக ஒடுக்குமுறை குறித்து குழுவிவாதங்கள் நடைபெறுகின்றன. அன்று காலை அரசியல் சட்டத்தின் அடிப்படை மாண்புகள் பாதுகாப்போம் என சூளுரைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

சிஐடியு -வின் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சுரண்டல் ஒழிப்பு, சோசலிசத்தை நிறைவேற்றுவதற்காக தொழிலாளி வர்க்க உணர்வை உயர்த்துவது, பாட்டாளி வர்க்க சர்வதேசிய உணர்வுடன் ஒருங்கிணைந்தது.

நவீன தாராளமயக் கொள்கைகள் உலகம் முழுவதும் தோல்வி அடைந்துள்ளன. 380 கோடி உலக ஏழை மக்களின் சொத்தும் 26 தனிநபர்களின் சொத்தும் சமம் என்பது 2018-ம் ஆண்டு நிலை. அமெரிக்காவில் மேல்தட்டு ஒரு சதவிதத்தினர் 30 லட்சம் கோடி டாலருக்கு சொந்தக்காரர்கள். 25 சதவீத குழந்தைகள் ராப்பட்டினி, பல கல்லூரி மாணவர்கள், குப்பைத் தொட்டியில் ஏதேனும் உணவு கிடைக்கிறதா என ஏங்கும் நிலை, குபேரபுரி அமெரிக்காவில் தான். சிக்கன சீரமைப்பு நடவடிக்கைகள் என்பதன் பேரால், உலக முதலாளித்துவ நாடுகளில், ஆட் குறைப்பு, சம்பள குறைப்பு பென்சன் பெறும் வயது உயர்த்தப்படுவது, பென்சன் குறைப்பது போன்ற தாக்குதல்கள், இதற்கு எதிரான அலை அலையாக வெடிக்கும் போராட்டங்கள்.

சோசலிச சீனாவில் 2021 -ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டின் போது சீனாவின் நகர்புற, கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை கனிசமாக உயர்த்துவது, 2049 -ல் சீனப்புரட்சியின் நூற்றாண்டில், முழுவதும் வளர்ந்த நாடாக்குவது என்ற இரண்டு இலக்குகள் நிர்ண யித்துள்ளார்கள். முதல் இலக்கு நிறைவேறிய பிறகு, சீனாவின் பொருளாதாரம் அமெரிக்காவை விட 40 சதவீதம் கூடுத லாகும். இரண்டாவது இலக்கு நிறைவேறும் போது மூன்று மடங்கு கூடுதலாக உயரும். சீனாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.07 லட்சம் கோடி டாலர்கள். சராசரி ஆயுட்காலம் 77 ஆண்டு. சீனாவின் சாதனைகளுக்கு நிலசீர்த்திருத்தமும் வேகமான தொழில் மயமாக்கலும் காரணம்.

சோசலிச வியட்நாமின் வளர்ச்சி அதிகரித்து வரு கிறது- 2021 -ல் டபிள்யுஎப்டியு -ன் சர்வதேச மாநாடு வியட்நா மில் தான் நடைபெறுகிறது. சோசலிச கியூபா, 60 ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதார தடையினால் 13400 கோடி டாலர் இழப்பை சந்தித்துள்ளது. இருப்பினும் கல்வி, சுகாதாரம் போன்ற பல துறைகளில்  கியூபா பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது “சோசலிசமே மாற்று மற்றதெல்லாம் ஏமாற்று” என்ற முழக்கம் மாநாட்டை பிரச்சாரம் செய்யும் வகையில் மாநில மெங்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

மோடி ஆட்சியில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையின்மை வளர்ந்துள்ளது. விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளது. உலகிலேயே இந்தியாவில் தான் பொது சுகாதாரத்திற்காக  குறைவாக அரசு செல வினம் உள்ளது. கடந்த ஏழரை ஆண்டுகளில் இப்போது ஏற்பட்டுள்ள மின்சார உற்பத்தி 12.2 சதவீத வீழ்ச்சி உயர்வா னது. ஆட்டோ மொபைல் தொழிலில், டெக்ஸ்டைல் தொழி லில் லட்சக்கணக்கில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது- காலிப்பணியிடங்கள் அரசு துறையிலும் மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் நிரப்பப்படுவதில்லை.

33 பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே, பாதுகாப்பு, துறைமுகம், விமான நிலையம், வங்கி, இன்சூரன்ஸ் துறை களுடன் கல்வி, சுகாதாரம், அங்கன்வாடி போன்ற அரசு திட்டங்களும் தான்தோன்றித்தனமாக தனியார் மயம் ஆக்கி வருகிறார்கள். பொதுத்துறையை வாங்க வந்தால் அவர்க ளை தடுத்து நிறுத்தும் போராட்டமும் தேச அளவிலான போராட்டங்களும் தேவை. அரசியல் சட்டத்தில் கூறப் பட்டுள்ள மதச்சார்பின்மை போன்ற அடிப்படை கோட்பாடு களுக்கு மோடி அரசு வேட்டு வைக்கிறது. மாறாதது என்று எதுவும் இல்லை, எதுவும் மாற்ற முடியும், மாற்றம் தானாகவும் நிகழாது, அரசின் தாக்கு தல்களுக்கு அஞ்சி, நம்மால் எதுவும் முடியாது என்ற நிலைக்கு தாழ்ந்து விடக்கூடாது. ஏன் நம்மால் முடியாது. நம்மால் முடியாதது என்ன என்ற கேள்வி மாநாடு ஏற்படுத்தும்.

ஜனவரி 23-ல் மற்ற மத்திய சகோதர தொழிற் சங்கங்களின் தலைவர்கள் வாழ்த்துரையுடன் துவங்கும் 16-வது , சிஐடியு அகில இந்திய மாநாடு, ஜனவரி 27-ல் நந்தனம் மைதானத்தில் ம.சிங்காரவேலர் நினைவு திடலில் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது. கருத்தாலும், கரத்தாலும் பாடுபடும் உழைப்பளி மக்களே! ஜனவரி 27-ல் சென்னையை செம்மயமாக்குவீர்.

கட்டுரையாளர் : மாநில துணைத்தலைவர், சிஐடியு

;